பருவமழை பொய்த்ததன் காரணமாக காரியாபட்டியில் வெள்ளரிப் பிஞ்சு விலை இருமடங்கு உயர்ந்து விட்டது.
காரியாபட்டி பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக பருவமழை பொய்த்ததன் காரணமாக கண்மாய்கள், ஊரணிகள், கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கிராம மக்களின் பெரும் வாழ்வாதாரமான வெள்ளரி விளைச்சல் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி பகுதியில் குராயூர், சென்னம்பட்டி, மருதங்குடி, ஓடைப்பட்டி உள்பட 20 கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ளரி விளைச்சல் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 400 ஏக்கர் வெள்ளரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் வெள்ளரி விளைச்சல் நடைபெறும் காரியாபட்டியில் இந்த ஆண்டு விளைச்சல் பாதிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வெள்ளரிப் பிஞ்சு விளைச்சால் பாதிப்பால் அதன் விலை இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. தரத்திற்கேற்ப 4 முதல் 6 எண்ணிக்கை கொண்ட வெள்ளரிப் பிஞ்சு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுபற்றி வியாபாரி ராஜேந்திரன் கூறுகையில், பருவமழை பொய்த்து விட்டதால் வெள்ளரிப் பிஞ்சு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே 10 எண்ணிக்கை கொண்ட வெள்ளரிப் பிஞ்சுகளை 10 ரூபாய்க்கு விற்பனை செய்தோம்.
பருவமழை பொய்த்தது, உரம் விலை உயர்வு, கூலி ஆட்கள் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது 6 எண்ணிக்கை கொண்ட வெள்ளரிப் பிஞ்சுகளை 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

